மனித சஞ்சாரம்
அற்ற
காடுடொன்றில்
தனித்து பயணிக்கிறேன்.
சிறு மழை
பெற்ற பின்னொரு பொழுதாய்
மண்ணில்
வாசம்
உச்சரிக்கப்படும்
ஒரு நாமம் ஒன்று
பெண்ணாகி
என் எதிரே.
இனம் கண்டது
எப்படி என்கிறேன்.
மூலத்தின்
பிரதி
எப்படி மூலத்தில்
இருந்து விலகலாம் என்கிறாள்.
என் காலடி
ஓசையுடன் சேர்ந்தே
ஒலிக்கின்றன
தண்டையின் ஒலிகள்.
பாதங்கள்
பாதைகளில்
பயணிக்கின்றன.
விளையாட்டாய்
ஆரம்பிக்கிறது
வார்த்தை
விளையாட்டுக்கள்.
'பிரம்மம்
என்ன செய்து கொண்டிருக்கிறது' என்கிறேன்
'பிரம்மமாய்
இருக்கிறது' என்கிறாள்.
ஆதி நாளின்
சூன்யத்தில் உடல்.புகைப்படம் : பாலா அவர்கள்
No comments:
Post a Comment