Friday, December 30, 2011

ரோஜா வாசம்


காய்ந்த நினைவோடைகள்
கணப் பொழுதினில்.
இருளின் துணை கொண்டு
நீ என்னை பயமுறுத்திய தருணங்கள்
இன்னமும் வெளிச்சங்களாய்.
ஒற்றை இரவினில் நீ
உதிர்த்து போன ரோஜா வாசம்
அறை எங்கும் சிதறிக் கிடக்கிறது.
நீர் அடித்து நீர் விலகாது.
நீ வீசிச் சென்ற நீரின் துளிகள்
காயாமல் இருக்கிறது
நெஞ்சுக்குள் நினைவுகளாய்.

No comments: