மழை ஒய்விற்கான பின் ஒரு பொழுதுகளில்
நீண்ட தெருக்களில் நெடும் பயணம் உன்னோடு.
இலைகளின் எச்சில்களாய்
எச்சங்களாய் மழைத்துளிகள்.
தரையினில் இருந்து
மேலே எழும்பி
இலைகளின் ஈரத்தை
உதிர்த்து விட்டு
காதலை சொல்லத் துணிகிறேன்.
மாறுதல் கொள்ளும் உடல் மீது
ஏன் இந்த மயக்கம் என்கிறாய்.
உதிர்ந்து விட்ட உயிர்ச் சொல்லின்
முடிவில் துவங்கிய வீச்சங்கள்
வேரிலிருந்து விழுதுகள் வரை.
No comments:
Post a Comment