காரணங்களின்றி காத்திருப்பு
வரும் புகைவண்டிக்காக.
நடை மேடையின் கடைவரை
ஒடிச் சென்று திரும்பும்
குழந்தைகள் கூட்டம்.
வருபவரை வரவேற்கவும்
வந்தவரை அனுப்பவும்
கண்ணிருடன் காத்திருக்கவும் கூட்டம்.
பெருத்த ஒலியுடன் வண்டியின் வருகையும்
பின்னொரு வியாபாரமும் தானாக நிகழும்.
விருப்பமுடன் உணவு உண்ணுதலும்
நீர் பிடித்து உண்ணுதலும் நிகழும்.
காலத்தின் கணக்கதனில்
வண்ணம் மாறும்.
வந்த தடம் அற்று வண்டி புகைவண்டி
புறப்பட்டுச் செல்லும்.
காலத்தின் சாட்சியாக
ஆல இலைகள் காற்றில் ஆடும்.
No comments:
Post a Comment