ஆதியில், மனிதர்கள் அற்ற இடத்தினில்
ஒரு மரம் இருந்தது.
வளரத்துவங்குகையில்
அது பேசத்தொடங்கியது.
அதன் பாஷைகள்
புரியாதனவாக இருந்தன.
ஒரு குழந்தையை அழைத்து
தன் மேல் கல் எறியச் சொன்னது.
புரிந்த குழந்தை கல் எறிந்து சிரித்தது.
'அங்க ஒரு மரம் இருக்குடா,
கல் எறிந்தால் பேசும்டா' என்றது தனது நண்பர்களிடம்.
குழந்தைகளின் வருகையினால்
தலைகீழ் மாற்றம் அவ்விடத்தில்.
கால மாற்றத்தில்
பயணத்திற்கு இடையூராக இருப்பதாக
பயணம் செய்பவன் ஒரு நாள் சொன்னான்.
விழுதுகள் வேரிலிந்து அறுக்கப்பட்டன.
பல காலம் கடந்த பிறகு
சில குழந்தைகள் பேசிக்கொண்டன.
'எங்க முப்பாட்டன் காலத்துல
அங்க ஒரு மரம் இருந்தது.
எங்க அப்பன் அதை அழிச்சிட்டான்டா '
No comments:
Post a Comment