Wednesday, June 5, 2013

தபஸ்

வார்த்தைகளில் பொருள் ஏற்றி
விளையாடும் பொழுதுகள்
உனக்கும் எனக்கும் புதியவை அல்ல.
'என்னைப் பிடிக்குமா' என்கிறாய்.
'மிகவும் பிடிக்கு'ம் என்கிறேன்.
'எனக்காக உன்
பெயரை மாற்றிக் கொள்வா'யா என்கிறாய்.
'மாற்றங்கள் அற்றது என் வார்த்தைகள்' என்கிறேன்.
'நேசித்தலில் மறத்தல்
ஒரு பகுதி தானே' என்கிறாய்.
'உன் பெயர் மறக்கப்படும்
நாளில் என் பெயர் பிணம்' என்கிறேன்.
கார்காலக் குறிப்புகள் உன் கண்களில்.

4 comments:

Unknown said...

Wow! Amazing... Thanks fr using my pic

Anonymous said...

Good one... :)

அரிஷ்டநேமி said...

Thank you Gayatri

அரிஷ்டநேமி said...

Thank you devadhaithozhan