Saturday, July 20, 2013

துலாக் கட்டம்

ஆற்றின் ஒரு கரையினில் நானும்
மறு கரையினில் நீயும்.
மொழிகள் அற்ற நாட்களில்
சைகைகளில் பாஷைகள்.
விளைவுகளில் நகரும் நாட்கள்.
பாஷைகள் பழகிய பொழுதுகளில்
உன் கரை நோக்கி வர என்னை பணிக்கிறாய்.
என் கரை நோக்கி வர உன்னை பணிக்கிறேன்.
அவரவர் இடம் விட்டு
எதிர் கரை நோக்கி பயணித்த பொழுதுகளில்
நதி கடந்திருந்தது.



துலாக் கட்டம் - மயிலாடுதுறையில், ஐப்பசி மாதத்தில், காவிரியில்  நடை பெறும் ஒரு விழா

No comments: