யாருமற்ற பொழுதுகளில்
அலைகள் மட்டும்.
அருகருகே நீயும் நானும்.
அலைந்து கொண்டிருக்கிறது காற்று.
வாழ்வினை வெற்றி கொண்டவனாக
'என்ன வேண்டும்' என்கிறேன்.
'துளிர்த்தல் இயல்பெனில்
உதிர்த்தலை என் சொல்வாய்'
என்கிறாய்.
சொல்லின் முடிவில்
இறக்கிறது ஒரு மாயப்பிரபஞ்சம்.
Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru
No comments:
Post a Comment