எல்லைகள் அற்ற ஒரு தருணத்தில்
நிகழ்ந்தது உன்னுடனான சந்திப்பு.
அகிலின் நறுமணம் எங்கும்.
நிகழ்வுகளை நியாப்படுத்தி,
இழப்பதற்கு எதுவும் இல்லை
ஏன் என்று விளக்கம் கேட்கிறேன்..
எதுவும் அற்றவனுக்கு
வாய்க்கிறது ப்ரபஞ்சமும்
வாழ்வும் என்கிறாய்.
நிர்வாணம் கொள்கின்றன
நினைவுகளும் நிஜங்களும்.
நவகண்டம் - தன்னைத்தான் பலியிட்டுக் கொள்ளுதல்
Click by : Bragadeesh
No comments:
Post a Comment