Tuesday, April 15, 2014

அலையும் அலைகள்


நம் எதிரே கடல் அலைகள்,
நம்முள் மன அலைகள்.
நம் பிரிவிற்கான காரணங்களை அடுக்குகிறாய்.
கடைசியான கவிதைக் கேட்கிறாய்.
'அஸ்தமனத்திற்கான பிறிதொரு விடியல்
எப்பொழுது நிகழும் என்கிறேன்'.
மௌனித்து என் பரிசுப் பொருள்களை
எல்லாம் கொடுத்து
உனக்கானப் பொருள்களை
எல்லாம் எடுத்துச் செல்கிறாய்.
அனைத்தையும் கொடுத்தப் பிறகும்
எச்சங்களாய் மீந்து இருக்கும்
நினைவுகளை என்ன செய்வாய்.

Click by : Chithiram Photography 

No comments: