அறையில் எழிலினை
எவரும் அறியக்கூடும்.
கலைந்த புத்தகங்கள்,
கசங்கிய ஆடைகள்,
புகை படிந்த ஜன்னல்கள்,
உதிர்ந்த சில சாம்பல்கள்,
முயக்கம் முன்னிருத்திய வீச்சங்கள்,
காலி மதுக் கோப்பைகள்,
அங்கொன்றும் இங்கொன்றுமாய் பீடித்துளிகள்,
பெரும் பசியினை மறுதலிக்கையில்
'வாடா சாப்ட' என்ற நண்பனின் அழைப்புகள்,
பின் தொடரும் குளியலறை அழுகைகள்,
கள் வெறி கொள்ளும் இலக்கிய பேச்சுக்கள்
இப்படியாகத்தான் கழிகிறது
இன்றைய இருப்பும்.
பிறிதொரு நாளில் தங்குபவன்
இருப்பும் இப்படியாகவே இருக்கலாம்.
Click by : R.s.s.K Clicks
No comments:
Post a Comment