Tuesday, June 24, 2014

சொற்கள் அற்ற இரவு

விளையாட்டாய் ஆரம்பிக்கிறது
உனக்கும் எனக்குமான சண்டை.
உன் கோபங்கள் என்னை
மகிழ்வு கொள்ளச் செய்கின்றன.
மகிழ்வான நிமிடங்கள்
முற்றுப் பெறும் முன் உரைக்கிறாய்
'நான் உன்னுடன் பேசப் போவதில்லை'
கண்ணீருடன் கலக்கின்றன
எனக்கான கவிதைகள்.
உறக்கத்தில்  கைகளால்
எதையோ தேடுகிறாய்.
'என்ன இருந்தாலும் நீ என் அப்பா
உன்னை பிடிக்காமல் இருக்குமா'
என்கிறாய்.
பிறிதொரு நாளில்
இதை நீ உணர்ந்து சிரிக்க
கவிதையாக்கி வைத்திருக்கிறேன்
என்னையும் நினைவுகளையும்.

புகைப்படம் மற்றும் இருப்பு : ராதா கிருஷ்ணன்

No comments: