Thursday, July 17, 2014

மௌன நாதம்

வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.
அருகருகே நீயும் நானும்.
அறிதல் பற்றிய வாதங்கள் தொடர்கின்றன.
நிலத்தை அறிய நிலமாக மாறு;
நீர் அறிய நீராக மாறு;
தீ அறிய தீயாக மாறு;
காற்றை அறிய காற்றாக மாறு;
ஆகாயம் அறிய ஆகாயமாக மாறு;
என்று உரைக்கிறாய்.
'எனில் உன்னை அறிவது எப்படி' என்கிறேன்.
என்றைக்கும் ஆன விழி அசைவு காட்டி
புன்னகைத்து
மௌனத்தைக் கற்றுத் தருகிறாய்.
பிறிதொரு நாளில்
வெண் நிலவு காய்ந்து கொண்டிருக்கிறது.
ஆற்றில் நீர் சலசலக்கிறது.


புகைப்பட உதவி :  R.s.s.K. Clicks

No comments: