காலங்களை ஒத்து
ஈரமாக இருக்கிறது நினைவுகள்.
எப்போதோ எவராலோ
உரைக்கப்பட்ட வார்த்தைகளை
நீ உணராமல் உரைத்திருக்கலாம்.
அப்போது நான் மட்டுமே அறிந்த
மௌனத்தின் உப்பு சுவைவை
நீ அறியாமல் இருக்கலாம்.
பிறிதொரு நாளில்
மீன் விற்பவளின் கைகளில் இருக்கும்
விசிறி காகிதமாய் அலைகின்றன உன் நினைவுகள்.
காகித விசிறிக்கா கட்டுப்படும் ஈக்கள்?
* அரவான் - மஹா பாரதப் போருக்கு முன் பலி கொடுக்கப்பட்ட மாபெரும் வீரன்
புகைப்படம் : R.s.s.K Clicks

No comments:
Post a Comment