மழை வருவதாக கூறி
கண்ணாடிக் கதவுகளை சாத்துகிறான் தகப்பன்.
புன்னகைத்து காற்று வரவில்லை எனக் கூறி
கதவுகளைத் திறக்கிறது பெண் குழந்தை ஒன்று.
பாம்பின் வாய்ப்பட்ட தேரையாய்
காலம் விழுங்கிக் கொண்டிருக்கிறது
ரயிலின் சில நிகழ்வுகளை
புகைப்படம் : Bragadeesh Prasanna
No comments:
Post a Comment