காலத்தின் மாற்றத்தில்
சோளக்கொல்லை பொம்மையாகி
நிற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
‘அழகாக உடுத்தி
வீதியின் நிற்றலே வேலை’ என்றார்கள்
கனவுகளுடன் காத்திருக்கையில்
பெரு
வயல்வெளிதனில்
கருங்குருவி ஒன்று வந்தது.
விரட்ட எத்தனமானேன்.
‘காகங்களை விரட்டுதலே வேலை
கருங்குருவி விரட்டுதல் அல்ல’
என்றது தலைமை பொம்மை.
பார்வைகள் பதிருக்கும் காங்களில்
பாத்திகளின் மேல் காகங்கள் அமர்ந்தன.
விரட்ட எத்தனமானேன்.
‘பாத்திகள் இருவருக்கு உரித்தானவைகள்’
என்றது மற்றொரு பொம்மை
‘நம்மின் வேலை தொடர்வோம்’ என்றும் கூறின.
முதுகுக்கு பின் சில காகங்கள் வட்டமிட்டன.
விரட்ட எத்தனமாகிறேன்.
‘முன்னே பார்த்தல் மட்டுமே நம் வேலை
பின்னே பார்த்தல் மற்ற பொம்மையின் வேலை’ என்றது தலைமை பொம்மை.
கண் எதிரே சில அண்டங்காக்கைகளும்
சில வீட்டுக் காகங்களும் விளையாடின.
விரட்ட எத்தனமானேன்.
‘வீட்டுக்காகங்கள் மதிக்கப்பட வேண்டும்
அண்டங்காகங்களை மட்டும் விரட்டப்பட வேண்டும்’
என்றது மற்றுமொரு தலைமை பொம்மை
பிறிதொரு
நாளில்
வேறு
சில பொம்மைகள் வயல்களில்.
வார்தைகள்
அற்று வினவுகிறேன்.
'மற்ற
பொம்மைகளின் படிச் செலவு
மாதம்
விடுத்து தினமாகிறது' என்றது தலைமை பொம்மை.
காலத்தின் மாற்றத்தில்
ஆடைகள்
அற்றுக் கிடக்கிறது
பொம்மை ஒன்று,
சில
காகங்கள் மட்டும் சீண்டி விளையாடுகின்றன
அப் பொம்மையை.
புகைப்படம்: Karthik Pasupathy
அப் பொம்மையை.
புகைப்படம்: Karthik Pasupathy
2 comments:
நானுமொரு பொம்மையாகி நிற்பதாக உணர்கிறேன். ஏதோ ஒன்று நிகழ்ந்தது, நிகழ்கிறது, இன்னும் நடக்கக் கூடும்.
நன்றிகள் சுந்தர்...
காலமும், வடுக்களுக்களும் அனைவருக்கும் பொதுவானவை. அதனாலே அதன் வலி உணர முடிகிறது. நன்றி அன்பு
Post a Comment