மரணத்தின் அனுபவங்களை
மனதோடு ஒன்றி கூறுமாறு
வழி பட்ட மனிதர்களை
வழியில் பட்ட மனிதர்களை வினவினேன்.
காய்ந்த கிளை ஒன்று
மரத்தினில் இருந்து
விழுவதைப் போன்றது என்றான் ஒருவன்.
நீண்ட நதியினில்
படகினில் பயணம் என்றான் ஒருவன்.
நண்டின் கால்களை ஒடித்து
உள்ளிருப்பதை உறிஞ்சுவதைப்
போன்றது என்றான் ஒருவன்.
நான்கு தினைகளின் திரிபில்
பயணம் என்றான் ஒருவன்.
அடங்காத மனைவியின் வார்த்தைகள் கேட்டும்
அமைதியை கொண்டாடும்
கணவனின் உணர்வு என்றான் ஒருவன்.
வாழ்வினை அனுபவித்தவனுக்கு
மரணம் சூட்சமாய் கொண்டாடப் படும்
என்றார் என்றைக்குமான கடவுள்.
2 comments:
அருமை அருமை
மரணத்தின் புரிதல் கூட அவரவர் நிலைபொருத்தே அதற்கென
தனியான உயரமோ விளக்கமோ இல்லை என்பதை
மிக நேர்த்தியாகச் சொல்லிப்போகும் படைப்பு அருமை
மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்
நன்றி. தொடர்ந்து வரவும்.
Post a Comment