ஊற்றிச் சென்ற
அமில வார்த்தைகள்
உலராமல்.
உணவிற்கான வசைவில்
உறைந்து கிடக்கிறது
உள் நெஞ்சில்
நெருப்பின் கங்குகள்.
காலத்தினால் மருந்திடப்படா
காயங்கள் எங்கினும் உண்டா?
தேகங்கள் தேயும் பொழுதுகளில்
தேவதைகளின் தோற்றம் கூடலாம்.
அக்கணத்திலாவது
உன் மெளனத்தைப் பரிசாக அளி.
No comments:
Post a Comment