Saturday, July 28, 2012

இருளினில் சொர்க்கம்


மின்சாரம் தொலைந்து
விளக்குகள் அற்ற பொழுதுகளில்
விட்டத்தில் ஒட்டி இருக்கும்
நட்சத்திர குவியல் கண்டு
சொர்க்கம்  எனில் என்னவென்றாள்
என் மகள்.
பதிலுக்கான புன்னகையில்
எதிர்ப்பட்டது எப்பொழுதுமான குரல்
போங்கப்பா நீங்க எப்பவுமே இப்படித்தான்.

No comments: