Saturday, November 17, 2012

சாசுவதம்


புகைப்படத்தின் மீது நாட்டம்
கொண்டவனாக இருந்த பொழுதுகளில்
உன்னைப் படம் எடுக்க விரும்பினேன்.
நிச்சயமற்ற ஒன்றை
நிச்சயப்படுத்தவா இப்புகைப்படம் என்றாய்.
அன்று முதல்
பிடித்துப் போனது உன்னையும்
பிடிக்காமல் போனது புகைப்படத்தையும்.

No comments: