நாளின் முடிவுப் பொழுதினில்
தனித்து நீயும் நானும்.
அறை எங்கும் நறுமணம்.
'எனக்கான..' எனத்துவங்குயில்
'அனைத்தும் அறிவோம்' என்கிறாய்.
ஆரத்தழுவுதலில்
கனத்திருந்த இதயம் கரைந்து போகிறது.
உனக்கான முத்த மழைகள்
கண்களை நீரினில் கரைத்துவிடுகின்றன.
மீண்டும் வார்த்தைகளைக் கோர்த்து
வாக்கியமாக்க துவங்குகிறேன்.
எல்லைகள் அற்ற பிரணவ ஓலி
எனக்குள் எனக்காக.
No comments:
Post a Comment