Wednesday, March 12, 2014

ஆதி நிகழ்வுகள்

விளக்க முடியா காலத்தில்
சொற்களின் பரிச்சயமும்
அதன் பயன்பாடுகளும்
உண்டானது.
விசித்திரம் அறியும் முன்னே
கொட்டிக்கிடக்கும் எழுத்துகள்
குவிந்து தோன்றின.
வார்த்தைகளின் அடுக்குதலை
அறிவித்தான் ஒருவன்.
கலைந்த எழுத்துக்களைக்
கவிதை ஆக்க கற்றுத் தந்தான் மற்றொருவன்.
சுழலும் கலைடாஸ் கோப்பாய்
வார்த்தைகளின் ருசியில்
வண்ணங்களின் வார்ப்புகள்.
வாள் வித்தை காட்ட
வயிறு ஒடுங்கிய ஒருவனை விரும்பி தேர்ந்தேடுத்தேன்.
வித்தைகளுக்கு முன்பான ஒரு தருணத்தில்
விரும்பி கற்றுத் தந்தான் மௌனத்தை.
காலடித் தடயங்களை
அழித்துச் செல்லும் கடல் அலைகளாய் மனம்.
பிறகு சொற்கள் அற்று, வார்த்தைகள் அற்று
மௌனத்தின் பாஷைகள் மட்டும்.

Click by : Bragadeesh Prasanna.

No comments: