நீண்ட நாட்கள் ஆயிற்று சந்தித்து என்கிறேன்
பெரு நீர்ப்பரப்பில் சந்திக்கலாம் என்கிறாய்
முழு நிலவினை சாட்சி வைத்து
நினைவுகளும் நிதர்சனங்களும் தொடர்கின்றன.
இருப்பினை விடுத்து
இழப்பினை உறுதி செய்வதா வாழ்வு என்கிறேன்.
புன்னகை வலது மூக்கில் இருக்கும்
வைர மூக்குத்தி வரை நீள்கின்றன.
சொற்களுக்கு நிறம் இருக்கின்றன என்கிறேன்.
அப்படி எனில் மௌனத்தின் நிறம் என்ன என்கிறாய்.
பிறிதொரு நாளில் இருக்கின்றன
மழையில் நனைந்த
நந்தியாவட்டை செடிகளாய் நினைவுகள்.
புகைப்படம் : Karthik Pasupathi
No comments:
Post a Comment