வாழ்வுக் கனவுகளில்
விழு திறக்க எத்தனிக்கிறேன்.
'ஓடு, ஓடு, பூதம் வருகிறது' என்கிறாய்
உன் தேமதுரக் குரலால்.
வியப்பால் விழுகளை உருட்டி
‘எங்கே,எங்கே’ என்கிறேன்.
'நான் தான் பூதம்
என்னைத் தெரியவில்லையா’
என்று கள்ளப் புன்னகை சிந்துகிறாய்
தேவதைகள் பூதங்களாய்
வேஷமிட்டு வரும் காலமிது.
மனோ மௌனம் - இறை தன்மையை கர்ப்பத்தில் அனுபவித்த நிலை
No comments:
Post a Comment