பிஞ்சுக் கைகளால்
ரோஜாப் பூ ஒன்றினை
வரைந்து முடிக்கிறாய்.
பின் வரும் நிமிடங்களில்
அழத் தொடங்குகிறாய்.
காரணம் வினவுகிறேன்.
பூக்கள் வாசனை அற்று இருக்கின்றன என்கிறாய்.
மகளின் வார்த்தைகளின் முடிவில்
தொட்டுத் திரும்புகிறது
எனது இளமைக் காலங்கள்.*உவாதி - த்யானிப்பவன். திருமந்திரம் - 1202
வடிவ அமைப்பு : சம்யுக்தா செந்தில்
No comments:
Post a Comment