விண் நோக்கி விழி வைத்து இருக்கும்
யாசகம் விரும்பா
யாசகன் ஒருவனை சந்தித்தேன்.
சிந்தனைகள் அற்று
நாணயம்
ஒன்றை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
சில நாணயங்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
சில காகித
நோட்டுக்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
மதிப்பு மிக்க காகித நோட்டுக்களை ஈகிறேன்.
பார்வையினில் பெரும் மாற்றங்கள் இல்லை.
வியப்பால் எனக்கான சிந்தனைகள் விரிகின்றன.
'பொருள் வரின் மகிழ்வில்லையா' என்கிறேன்.
'யாசகனுக்கு எதிலும் எப்பொழும் மகிழ்வு தான்' என்கிறான்.
உயிரின் ஒலி அடங்கும் காலம் உடலில்
புகைப்படம் : SL Kumar
No comments:
Post a Comment