கடந்த காலங்களின்
கடைசி கட்டங்களில்
உயிர் ஒன்று துடித்துக் கொண்டிருந்தது.
தேகம் மாற்றம் கொள்ள ஆரம்பித்தது.
வசந்தங்களின் சாயல் அற்று
வயதானவள் ஒருவள் வருகிறாள்.
'யார் நீ' என வினவுகிறான்.
'உன்னின்
சொல் அம்புகள் வாங்கியவள்
திருப்பித் தர வந்திருக்கிறேன்' என்கிறாள்.
'இத்தருணத்திலா' என்கிறான் அவன்'
'இதுவே தருணம் என்கிறாள்' அவள்.
'யாரும் அறியா சொற்களை வீசி எறிகிறாள்'
அவன் கண்கள் பனிக்க துவங்கின.
மீண்டும் தேகம் மாற்றம் கொள்ள ஆரம்பித்தது.
மீண்டு வந்த உயிர் ஒன்று
தன் சொற்களை திருப்பி தர யத்தனிக்கிறது.
வினாடிக்கும் குறைவான நேரத்தில்
விரைவாக பல மாற்றம் அவ்வுயிரில்.
வரிசை குறையாமல் வருகிறது பெருங் கூட்டமொன்று.
'விலகிச்
செல்லுங்கள்' என்று கட்டளை இட்டு
தன் மடியினில் இருத்திக் கொள்கிறது மூத்த உயிரொன்று.
துடித்த உயிரின் கைகள் கூப்புகின்றன.
காசி பயணத்தின் மந்திரங்கள் உயிரின் காதுகளில்.
யாவற்றையும் கவனியாது
வெய்யில் பார்த்து உறங்கிகொண்டிருந்தது
கருமை நிற நாயொன்று.சளம் - துன்பம், சளத்தில் பிணிபட்டு - கந்தர் அலங்காரம் பாடல் - 7
புகைப்படம் : Vinod V
No comments:
Post a Comment