
படர்ந்து ஓடும் ஆறு,
மனதை வருடும் காற்று,
இரைச்சலைத் தாண்டி
குருவிகளின் ஒலிகள்,
உயரமான இடத்தில்
நட்சத்திர ஓட்டலில்
மனைவியான உன்னுடன் உணவு.
அனைத்தும் தாண்டி ஒர் குரல்.
நாடார் கடையில போய்
நாலு ரூவாயிக்கு கடன் சொல்லி
சக்கரை வாங்கி வாடா
உங்கப்பனுக்கு காப்பி தண்ணி
ஊத்தணும்.
2 comments:
கடைசி வரி யதார்த்தம்
ஒரு பெரும் அடி கொடுத்துப் போனது
மனம் கவர்ந்த படைப்பு
ரசித்துப் படித்தேன்
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி. தொடர்ந்தும் தொட்டும் வரவும்.
Post a Comment