Tuesday, March 1, 2016

சூன்யம் பயணக் குறிப்புகள்


என்னின் பிரதியாக
எனக்குள் என்னில் இருந்து,
மாயையின் சாயலாக நிழல்.
ஏற்றம் கொள்ளும்;
கண்ணில் பட்டு காலில் விழும்;
மாற்றம் கொண்டு இயல்பு மாறும்;
தருணம் ஒன்றும் தேவையில்லை
தானே தொடர.
தானும் சூன்யமாகும் தருணத்தில்
நேர் கோட்டில் பயணிக்கும்
சூன்யமும்.

நிழலும் புகைப்படமும் :  Sundar

2 comments:

K. ASOKAN said...

தத்துவ கவிகள் நன்று

அரிஷ்டநேமி said...

தோழமையின் கருத்துக்கு நன்றி.