Monday, April 4, 2016

முக்தி பவன்


நீண்ட நாட்களுக்கு பிறகு
அமைகிறது உனக்கும் எனக்குமான சந்திப்பு.
உன் பாதத்தை தொட்டுச் செல்லும் ஆடைகள்
ரத்தம் சார்ந்த நிறமாய் இருக்கிறது.
சுடர் தரும் விளக்கின் ஒரு புறத்தில் நீயும்
மறு புறத்தில் நானும்.
மெல்லிய பூங்காற்று நம் இருவருக்கும் பொதுவாய்.
'ஏன் இந்த விலகல்' என்கிறேன்.
'எது விலகல்' என்கிறாய்.
'என்னை உன்னிடத்தில் தர நினைக்கிறேன்' என்கிறேன்
'நீரில் இருந்து நீர் பிரிந்தால் அலை
எதிர்முகமாய் எனில் கடல்' என்கிறாய்.
'நாம் இப்போது கடலாகிவிட்டோம்' என்கிறாய்
மயக்கம் தரும் சம்மங்கிப் பூவின் வாசம்
காற்றில் கரைகிறது இருவருக்கும் பொதுவாய்.
பிறகு
காலம் உறைந்து நிற்கிறது எவரும் அறியாமல்.


*முக்தி பவன் - காசியில் இருக்கும் ஒரு Lodge ன்  பெயர். தன் விருப்பமுடன் இறக்க விருப்பம் உள்ளவர்கள் 5 நாட்கள் மட்டும் இங்கு தங்க அனுமதிக்கப்படுவார்கள். 5 நாட்களுக்குப் பிறகு உயிர் இருப்பின் Lodge ஐ விட்டு வெளியேறி விடவேண்டும்.


No comments: