Tuesday, April 26, 2016

வினை ஒறுத்தல்



ஊன் எங்கும் ஆரத் தழுவி இருக்கின்றன
தழும்புகள்
கண்ணுக்கு தெரியா காலமொன்றில்
ஒன்று தான் இருந்தது.
காலமாற்றத்தில் பெருகிப் போனது.
ஆடை ஒன்றை அணிகிறேன்
ஆடைகள் பல்கி பெருகுகின்றன.
பிறிதொரு நாளில்
காயங்கள்
முற்றுப் பெருகின்றன
நான் நிர்வாணமாகிறேன்.

வினை ஒறுத்தல் -  வினை அனைத்தையும் அழித்தல்
புகைப்படம் : இணையம்

2 comments:

K. ASOKAN said...

மிக நன்று

அரிஷ்டநேமி said...

தோழமையின் கருத்துக்கு நன்றி.